Categories
உலக செய்திகள்

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாராட்டு…. ஆப்பிள் நிறுவனத்தின் CEO வெளியிட்ட தகவல்…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மாணவர்களை பாராட்டியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள சுமார் 40 உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஐபோன் 13 மினியில்  புகைப்படங்கள் எடுத்தனர். அந்த புகைப்படங்கள், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் காட்சிப் பெட்டியில் வைத்துள்ளனர். “தங்கள் சமூகங்களின் அதிர்வு” தொடர்பில் தமிழ்நாட்டு மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள், ‘லேண்ட் ஆப் ஸ்டோரீஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் கண்காட்சியில் தகுதி பெற்றிருக்கின்றன.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக், தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த 40 உயர்நிலைப் பள்ளிகளின் மாணவர்கள் ஐபோன் 13 மினியில், “தங்கள் சமூகங்களின் அதிர்வு” தொடர்பான புகைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.

தற்போது அந்த புகைப்படங்கள் சென்னையில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |