Categories
மாநில செய்திகள்

3 ஆண்டுகால பணி நீட்டிப்பு…. உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் 5 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை கடந்த 2017-ம் ஆண்டு அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவையைவிட அதிகமாக பேராசிரியர்களும், அலுவலக ஊழியர்களும் இருக்கின்றனர். இவர்களை வேறு அரசு துறைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறைகளுக்கு மாற்றி  பணி நிரவல் செய்யும் வரை புதிதாக யாரையும் நியமிக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்ணாமலை பல்கலைகழகத்தின் 369 ஆசிரியர்கள் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து 2645 அலுவலர்கள் மற்றும் 545 பேராசிரியர்கள் வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்ட 545 பேராசிரியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு கல்லூரிகளில் பணியாற்றிவரும் 370 இதர பேராசிரியர்களுக்கும் 3 வருடங்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான முழு விபரங்களையும் உயர்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என கல்வி இயக்குனரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |