அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கின்றது.
தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்ற நிலையில் அண்மையில் அகவிலைப்படியை உயர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் தற்செயல் விடுமுறைக்கு தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. இதை விரிவாக கூறுவதென்றால் சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என அனைத்திற்கும் மருத்துவச் சான்றிதழ் கொடுத்து சிறப்பு தற்செயல் விடுப்பு தமிழக அரசு அளிக்கின்றது.
இது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாழும் அரசு ஊழியர்களுக்கும் இந்த சிறப்பு விடுப்பு வழங்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கும் இருபத்தி ஒரு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கின்றது. இதனால் தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.