போலந்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியையும், ராணுவ மந்திரியையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
உக்ரைனில் போர் நடக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து சென்றிருக்கிறார். அந்நாட்டின் வார்சா நகரத்தில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரியான டிமிட்ரோ குலேபா மற்றும் ராணுவ மந்திரியான ஒலெக்சி ரேஸ்னிகோபோன்றோரை சந்தித்து பேசியிருக்கிறார்.
அவர்கள் உக்ரைன் நாட்டில் தற்போது இருக்கும் நிலையை ஜோ பைடனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியான ஆண்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் இருந்தார்கள். மேலும் போலந்து நாட்டில் இருக்கும் அமெரிக்க துருப்புகளிடமும் ஜோ பைடன் பேசியிருக்கிறார். அப்போது அனைவரும் பீட்சா சாப்பிட்டனர். எனவே, அமெரிக்க துருப்புகள் தங்களுடன் சேர்ந்து அதிபர் சாப்பிட்டதால் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.