நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி சென்ற அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.
இந்தியாவின் 75வது சுதந்திர அமுத தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பாக சுதந்திர தின அமுத விழா நிகழ்ச்சிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மாரத்தான் மற்றும் படகு போட்டிகள் உள்ளிட்டவை நடந்தது. இதன் விளைவாக இன்று சைக்கிள் பேரணியானது 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற நிலையில் தமிழக தகவல் மற்றும் தொழில் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.