Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவர்களுடன் மரத்தடியில் ஆட்சியர்…. அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு….!!

அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென கலெக்டர் ஆய்வு செய்த மாணவர்களிடம் கலந்து உரையாடிய சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் மோகன் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். காலை 9 மணிக்கு பள்ளி வளாகத்திற்குள் கலெக்டர் வந்தபோது வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை என்பதால் மாணவ மாணவிகள் மரத்தின் அடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த கலெக்டர் மாணவ மாணவிகளிடம் சென்று என்ன பாடம் படிக்கிறீர்கள் என்று கேட்டு அவர்களுடைய கல்வி திறன் குறித்து கேட்டறிந்தார். ஒவ்வொருவரும் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். அப்படி படித்தால் தான் 100% இலக்கை எட்ட முடியும் என்று கூறினார்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இருக்கின்றதா? என்றும், தண்ணீர் வசதி போதிய அளவு இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தார்.மேலும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பள்ளி வளாகத்தில் நுழைந்து ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாணவர்களிடம் அமர்ந்து கலந்துரையாடிய சம்பவம் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆச்சிரியமாகவும், இருந்தது.

Categories

Tech |