பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரு நாட்களிலும் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாமல் கிடைக்கும் என அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வருகின்ற மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் நடைபெற இருப்பதால் அத்தியாவசிய சேவைகள் தடைபடாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றது. மத்திய தொழிற்சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்திருக்கின்ற நிலையில் இதற்கு தமிழக திமுக முதலான கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு கட்சி சார்ந்த தொழிற் சங்கங்களும் ஆதரவு அளித்திருக்கின்றது.
இதனால் அத்தியாவசிய சேவைகள் தடைபடாமல் இருக்க அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாவது, அத்தியாவசிய சேவைகள் தடைபடாத வண்ணம் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும் பேருந்து இயக்கத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணமும் இரு நாட்களும் தடையில்லாமல் மின்வினியோகம் வழங்கப்படும் என கூறியுள்ளனர். வேலை நிறுத்தம் நடைபெறவுள்ள இரு நாட்களுக்கு பொது இடங்களில் போராட்டம் நடைபெற இருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.