Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“250 ரூபாய்க்கு வாங்குகிறோம்” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசணம் ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கோசணத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நம்பியூர்-கோபி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் செலவு செய்கிறோம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதற்கு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இரண்டு நாட்களில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்து தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |