கூடுதலாக மாத்திரைகளை சாப்பிட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மநாயக்கன்பட்டி இந்திராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 13 ஆண்டுகளாக சேலம் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல் உபாதை அதிகரித்ததால் மூதாட்டி கூடுதலாக 2 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.
இதனால் மயங்கி விழுந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.