Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள்…. விவசாயி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆட்டுக்குட்டியை திருடிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியவீராணத்தில் விவசாயியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயகுமாரின் ஆட்டை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து விஜயகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆடுகளை திருடிய குற்றத்திற்காக சபரி குமரன், லியாண்டர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதன்பின் அவர்களிடமிருந்த ஆட்டுக்குட்டியை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Categories

Tech |