சிறுமியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி வெள்ளாண்டிவலசு காந்திநகர் பகுதியில் டான்ஸ் மாஸ்டரானா சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடனம் கற்று கொடுத்துள்ளார். அப்போது சரவணனுக்கும், 13 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து சரவணன் மாணவியின் வீட்டிற்கு சென்ற அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.