மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அதே பகுதியில் வசிக்கும் பகுதியில் 17 வயதுடைய பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.