மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வகைகுளத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பெரியசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளம் அருகே சிற்றாற்றில் குளித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாரியம்மாள் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மாரியம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரியம்மாள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.