Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 வகுப்பிற்கான பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிவிட்டதால் விட்டவர்களின்‌ பெயர்களை சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின்  தாக்கம் குறைந்தபிறகு கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இதைத் தொடர்ந்து பொதுத்தேர்வு 10-ம் வகுப்பிற்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11-ஆம் வகுப்புக்கு மே 9 முதல் 31-ஆம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பிற்கு மே 5 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும்.

இதனையடுத்து பொதுத் தேர்வுக்கான முடிவுகள் 10-ம் வகுப்பிற்கு ஜுன் 17-ஆம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு ஜூலை 7-ஆம் தேதியும், 12-ம் வகுப்பிற்கு ஜூன் 23ஆம் தேதியும் வெளியாகும். இந்நிலையில் பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில் ஆசியரியர்கள் பாடத்திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 10 மற்றும் 11-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதுபவர்களில் சிலரின் பெயர்கள் விடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறவிட்டு அவர்களுக்காக தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 28 மற்றும் 30-ஆம் தேதி வரை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

Categories

Tech |