கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சோதனைச் சாவடி சாலையில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
அதில், ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவுக்கு 550 கேன்களில் கடத்திச் சென்ற 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் பறிமுதல் செய்தனர். மேலும், லாரியில் இருந்த ஆந்திர மாநிலம் சித்துரைச் சேர்ந்த மோகன், சிவய்யா ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.