தீ விபத்து ஏற்பட்டதால் வைக்கோல் படப்பு எரிந்து நாசமானது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரியில் விவசாயியான குருவைய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு காந்தி ரோடு 1-வது தெருவில் அமைந்துள்ளது. இந்நிலையில் வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.