விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து இந்த தொலைக்காட்சியில் புதிதாக ”சிப்பிக்குள் முத்து” என்ற சீரியல் விரைவில் தொடங்க இருப்பதாக புரோமோ வெளியானது. விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல ”செந்தூரப்பூவே” சீரியல் முடிய போவதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.