Categories
தேசிய செய்திகள்

ALERT: நாடு முழுவதும் ஏ.டி.எம் சேவைகள் பாதிப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் ஏ.டி.எம் பணம் சேவை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும்‌ வங்கி ஊழியர்கள் வருகிற 28 மற்றும் 29-ம் தேதி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை ஊழியர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் வங்கிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரணமாக ஏ.டி.எம் சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது

Categories

Tech |