Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்கக்கொடி கிராமத்தில் சண்முகம்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுவாசினிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி தனது மகள் சுவாசினிகாவை  மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு  கண்ணங்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராணியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் ராணி சத்தம் போட்டு கத்தியதால்  அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராணி மற்றும் அவரது மகள் சுவாசிகா ஆகிய 2 பேரையும்  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராணி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகையை பறிக்க முயன்ற வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |