தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். துபாயின் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஸ்டாலின், பின் அங்கு தமிழ் அரங்கை திறந்து வைத்தார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பை ஏற்று அவரது ஸ்டூடியோவுக்கு சென்ற ஸ்டாலின், EXPO நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட காரணங்களுக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது குடும்ப சுற்றுலாவா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.