துபாயில் நடைபெறும் உலக கண்காட்சிக்கு சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி விமானம் மூலமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார். இவர் துபாயில் நடைபெறும் உலக கண்காட்சி விழாவில் தமிழ்நாட்டின் அரங்கினை திறந்து வைப்பதற்காக சென்றுள்ளார். இவர் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டின் அரங்கினை திறந்து வைத்தார். அதன்பிறகு அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் துபாய் மற்றும் அபிதாபி பயணங்கள் சிறந்த அனுபவங்களை தருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதைக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக இந்த பயணம் அமைந்துள்ளது. கடல் கடந்து சென்று புரிந்துணர்வு ஒப்புதல்களையும் அதற்கான முதலீடுகளையும் பெற்றுள்ளேன். மேலும் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டை முதன்மை மற்றும் சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் தலையாய கடமையாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.