Categories
அரசியல் மாநில செய்திகள்

வெள்ளை சட்டையும்…. வேட்டியும் தான் எப்போதுமே கெத்து…. ஸ்டாலின் பெருமிதம்…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தற்போது மீண்டும் தமிழகம் திரும்ப உள்ள முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். துபாய் பயணத்தை பற்றி ஒரு சிலர் பேசி அரசியலுக்காக தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். நம்மில் ஒருவர்-நமக்கான முதல்வர் என்ற தலைப்பில் அமீரக தமிழர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

துபாயில் பெரும் மகிழ்ச்சியை தமிழ் சொந்தங்கள் வெளிப்படுத்தினர். இலக்கை நிர்ணயித்து உறுதியுடன் பயணித்தால் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும் என்பதை கற்க முடிந்தது. கோட்டு சூட்டு அணிந்தால் வெளிப்படும் கவுரவத்தை விட வெள்ளை சட்டையும், இருவண்ணா கரை வேட்டியும் தான் எப்போதும் கெத்து, என்னாலும் கவுரவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |