மராட்டியத்தின் ஷீரடியில் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தபட்டது.
மராட்டியத்தில் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சமீபத்தில் வருகைதந்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடத்தில்தான் சீரடியில் அல்ல. அதனால் பத்ரி நகர வளர்ச்சிக்காக ரூபாய் 100 கோடி வழங்கப்படும் என்ற தகவலை தெரிவித்தார். அதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் சீரடியில் இன்று பந்த் நடத்தப்படும் என அறிவித்தனர்.
இதனையடுத்து சீரடி சாய்பாபா கோயில் காலவரையறையின்றி மூடப்படும் என்று தகவல் பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. அதன்படி கோவையில் ஆர்த்தி வழிபாடு மற்றும் அனைத்து மத சடங்குகளும் தொடர்ந்து நடைபெற்றன மேலும் மருத்துவமனைகளில் வழக்கம்போல் இயங்கியது.
எனினும் ஷீரடி பகுதியில் இன்று பந்த் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த பந்த் பற்றி சாய்பாபா கோவிலின் முன்னாள் அறங்காவலர் மற்றும் பா.ஜ.க. உறுப்பினரான சச்சின் பாட்டீல் கூறும்பொழுது, ஷீரடி நகரில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டு, முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஷீரடியை சுற்றியுள்ள 25 கிராமங்களிலும் இந்த பந்த் அனுசரிக்கப்பட்டு உள்ளது என கூறினார். பந்த் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் அரசு போக்குவரத்து பேருந்துகள் வேறு பகுதிகளில் இருந்து நகருக்குள் வர அனுமதிக்கப்பட்டது.