Categories
சினிமா தமிழ் சினிமா

இறங்கி அடிப்போம்…! உன்கிட்ட இருக்குற எல்லாத்தையும் வேரோடு புடிங்கிடுவேன்…. மாஸாக வெளியான கேஜிஎஃப் – 2 ட்ரெய்லர் ..!!

இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாக இருந்த “கேஜிஎஃப் 2” திரைப்படம், கொரோனா தாக்கத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகின்றார். முன்னணி நடிகரான யாஷ் நடிக்கும் இந்த படத்திற்கு கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடிக்கின்றார். மேலும் சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் “கேஜிஎஃப் 2” திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்டார்.

Categories

Tech |