Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. இந்நிலையில் தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களும்  சீருடை அணிந்து மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என கர்நாடக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஹிஜாப் அணிந்து வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும் மேலும் தேர்வை புறக்கணிப்போருக்கு  மறுதேர்வு எதுவும் நடைபெறாது  என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை, அரசின் உத்தரவையும், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |