Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!…. இனி 21 நாட்கள் விடுமுறை…. தமிழக அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு, அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களை போலவே தமிழக அரசு ஊழியர்களும் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ அல்லது தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ சிறப்பு தற்செயல் விடுப்பு 7 முதல் 14 நாட்கள் வரை வழங்கப்பட்டது. மேலும் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பினை சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விடுமுறை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மற்றொரு சலுகையையும் வழங்க உள்ளது. அதாவது, அறுவை சிகிச்சை செய்துகொண்ட அரசு பெண் ஊழியர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு 21 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெண் ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |