Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 8 பேர் உயிரோடு எரித்து கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

மேற்கு வங்காள மாநிலதில் 8 பேர் எரித்து கொள்ளப்பட்ட வழக்கை சிபிஐ 2வது நாளாக விசாரனை நடத்தி வருகிறது.

மேற்கு வங்காள மாநிலம் ராம்பூர்கட் பகுதியில் பக்டூய் கிராமத்தை சேர்ந்தவர் பகது ஷேக்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவரான இவர் மீது கடந்த திங்கட்கிழமை அன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை  அதே பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனா ஷேக் ஆதரவாளர்கள்  நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையில் பணம் பங்கிடுவதில் பல ஆண்டு காலமாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு பகது ஷேக்கின் சகோதரன் பாபர் ஷேக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு சோனா ஷேகிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு இவர்களுக்கு இடையே மோதல் அதிகமானது.

இதற்கிடையில் திங்கட்கிழமை பகது ஷேக் கொல்லபட்டதுக்கு சோனா ஷேக் ஆதரவாளர்கள் தான் காரணம் என்று சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால்  கோபமடைந்த பகது சேக் ஆதரவாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் பக்டூய் கிராமத்திற்கு சென்று சோனா சேக் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலால் மூன்று பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி அனருல் ஹசன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை கொல்கத்தா ஹைகோர்ட் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சிபிஐ இந்த வன்முறை தொடர்பாக 21 பேர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |