கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவ்யா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.