Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையேற்றத்தை கண்டித்து…. மக்கள் கட்சியினர் கோரிக்கை…. கடலில் இறங்கி போராட்டம்….!!

சமையல் கியாஸ் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமையல் கியாஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் மாரீஸ், மாரிஸ் குரு சர்மா, மகளிர் அணி  நிர்வாகிகள் சுந்தரி, லட்சுமி, கவிதா உள்பட பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் அக்னி தீர்த்த கடலில் இறங்கி சமையல் எரிவாயு மற்றும் அடுப்பை போட்டு நூதன முறையில் போராடியுள்ளனர்.

Categories

Tech |