மத்திய அரசின் தனியார்மயமாக்குதல் கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் அரசு அதிகாரிகளால் நடத்தப்பட இருக்கிறது.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், ஏழைகளுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, பிஎஃப் மற்றும் வட்டி குறைப்பு உள்ளிட்ட கொள்கைகளைக் கண்டித்தல், எஸ்மா சட்டம், எரிபொருட்களின் விலை உயர்வு, அரசு சொத்துக்களை விற்றல் போன்றவற்றை கண்டித்து மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்த போராட்டத்தில் 20 கோடிக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் பொதுத்துறை வங்கி ஊழியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் வங்கி சேவைகள் மற்றும் ஏ.டி.எம் சேவைகள் பாதிக்கப்படலாம். இதனையடுத்து வருமான வரித்துறை, அஞ்சலக துறை, டெலிகாம், நிலக்கரி, எண்ணைய், இன்சூரன்ஸ் துறை, மின்வாரியத்துறை, பணியாளர்கள், போக்குவரத்துத்துறை, வங்கி உள்ளிட்ட துறைகளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன் காரணமாக அனைத்து துறைகளிலும் கடுமையான தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.