அனுமதி ஊர்வலம் சென்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் அருகே இரட்டைமலை கிராமம் உள்ளது. இப்பகுதியில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனை கண்டித்து அப்பகுதியினர் பரமக்குடி தனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்றனர்.
இதனையரித்து சென்ற எமனேஸ்வரம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றதாக கூறி 24 பேரை கைது செய்துள்ளனர்.