அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் வசித்து வரும் கிறிஸ்டினா ஓஸ்டர்க் (வயது 24) என்ற பெண்ணுக்கு தற்போது 22 குழந்தைகள் உள்ளன. இவருடைய கணவர் காலிப். வாடகை தாய் முறையில் இருவரும் 22 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடியை (1,95,000 டாலர்களை) இருவரும் செலவு செய்துள்ளார்கள். கிறிஸ்டினா, காலிப் மற்றும் 22 குழந்தைகள், காலிப்-ன் முன்னாள் மனைவி மூலமாக பிறந்த ஆறு வயது மகள் உட்பட 23 குழந்தைகள் தற்போது ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CYMEiPYoe-q/?utm_medium=copy_link
இதற்கிடையில் இந்த பெரிய குடும்பம் குறித்து கிறிஸ்டினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு பயங்கர வைரலானது. கிறிஸ்டினா இன்ஸ்டா பதிவில், “எப்போதும் நான் குழந்தைகளுடனே இருக்கிறேன். என்னுடைய குழந்தைகளுக்கு ஒரு தாய் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் நான் முறையாக செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.