இரவு வகான விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் எல்.இ.டி மின்விளக்கு பொருத்திய ஜாக்கெட் வழங்க உத்தரவு.
சென்னையில் வாகன போக்குவரத்து மிக அதிகரித்துள்ளது. இதனால் சாலை விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகரின்அனைத்து சாலைகளிலும் எல்.இ.டி சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன . இதனைத் தொடர்ந்து முக்கியமான சிக்னல்களில் ஒலிபெருக்கி உதவியுடன் வாகன ஓட்டிகளிடம் சாலையின் விதிகளை குறித்து விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. மேலும் பணியில் இருக்கும் போக்குவரத்து காவல் துறையினரின் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன.
அவ்வகையில் போக்குவரத்து போலீஸாரின் சட்டையில் அணியக்கூடிய அதிநவீன கேமராக்கள், ரேடியம் பொருத்தப்பட்டுள்ள ஜாக்கெட் வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இரவில் சிக்னலில் வேலை செய்யும் போலீசாருக்கு பேட்டரியின் உதவியால் சிவப்பு நிறத்தில் எரியக்கூடிய எல்.இ.டி விளக்குகள் கூடிய ஜாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. கமிஷனர் உத்தரவு பிறப்பித்ததன் மூலம் முதற்கட்டமாக 500 போக்குவரத்து போலீசாருக்கு இரவில் ஒளிரக் கூடிய எல்.இ.டி ஜாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது.
இதை அணிந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை போலீஸ்சார் செய்து வருகின்றனர். இந்த ஒளிரும் ஜாக்கெட் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மத்தியில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கிறார் என்றும் போக்குவரத்து விதிமுறையை பொதுமக்கள் மதித்து சாலையில் செல்லவேண்டும் என்ற பயத்தை உருவாக்கி இருக்கிறது.