Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. பெற்றோருக்கு தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோகரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மனோகரனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனோகரன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர்.

அப்போது சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனோகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |