சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் கடைவீதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மற்றும் அனுராதா என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ராஜேந்திரன் மற்றும் அனுராதா ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் 4000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.