கடந்த ஒரு மாத காலமாக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள், குடிமக்கள் என ஆயிரக்கணக்கானோர் மரணித்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் இந்த போர் அணு ஆயுத போராக மாற வாய்ப்புள்ளதா ?என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, “எந்த போரையும் யாரும் விரும்பவில்லை.
அணு ஆயுத போர் மனித நாகரீகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளில் அணு ஆயுத வளர்ச்சியானது எண்ணற்ற பெரிய மோதல்களை தடுத்துள்ளது. ரஷ்ய பிராந்திய பகுதிகளை நோட்டாவின் அணு ஆயுதங்கள் இலக்காக கொண்டுள்ளன. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நோக்கி ரஷ்ய ராணுவம் குறிபார்த்து கொண்டிருக்கின்றன. எனவே பொறுப்புடன் செயல்பட்டு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.