Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் பெற தகுதியானவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்யும் என்று அறிவித்திருந்தது. ஆனால் நகை கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். அதன்படி நகை கடன் தள்ளுபடி மோசடியில் வங்கி அதிகாரிகளும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலி நகைகளை அடகு வைத்து நகை கடன் பெறுவது, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகை அடகு வைத்து இருப்பது போன்ற பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசு நகை கடன் தள்ளுபடி தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது.

இந்த நகை கடன் தள்ளுபடிக்கு 48 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் கீழ் உள்ள பயனாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நகை கடன் தள்ளுபடி நாமக்கல் மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படடு வருகிறது. இதேப்போன்று புத்தகரம் மற்றும் ஆதினக்குடி பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும் நகை கடன் தள்ளுபடி வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது.

Categories

Tech |