மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, அம்மாநில முதல்வராக என்.பைரேன் சிங் மீண்டும் பதவியேற்றுள்ளார். முன்னதாக தனது தேர்தல் பிரசாரத்தின் போது, மணிப்பூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு வாரத்துக்கு 6 நாட்களாக இருந்து வரும் வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கப்படும் என பைரேன் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வகையில், இத்திட்டத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணிப்பூர் அரசின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிற்கு இனி வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் மட்டும் வேலை நாட்கள் ஆகும். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது