Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.28) 11 இடங்களில்…. ரயில்கள், பேருந்துகள் இயங்குவதில் சிக்கல்?…. பீதியில் பொதுமக்கள்….!!!!

மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. சென்னையை பொறுத்தவரை 11 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. அதேபோல் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை பகுதி என தனித்தனியாக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டத்திற்காக தொழிலாளர்கள் 9 இடங்களை வடசென்னை பகுதியில் தேர்வு செய்துள்ளனர். அதேபோல் சட்டமன்ற தொகுதி வாரியாக வடசென்னையில் தபால் நிலையங்கள் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது. தென் சென்னையில் ஒரு இடத்திலும், மத்திய சென்னைக்கு உட்பட்ட பகுதியில் ஓரிடத்திலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய சென்னையை பொறுத்தவரையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்சென்னையில் கிண்டி பேருந்து நிலையம் அருகே தபால் நிலையம் முன்பாக போராட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் ரயில்கள், பஸ்கள் இன்று இயங்குமா ? என்கிற கேள்வி எழுந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |