மாணவர்களின் கற்றல் திறனை தலைமை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இவர் திருவாரூர் மாவட்டத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளின் வருகை பதிவினை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்க வேண்டும். இதனையடுத்து பள்ளியின் எதிர்காலத்திற்கு தலைமை ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எனவே மாணவ-மாணவிகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட ஒவ்வொரு ஆசிரியர்களும் பாடுபடவேண்டும். மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவர்களுக்கு கற்றல் திறனை மேன்மேலும் வளர்க்க வேண்டும். மேலும் கல்வியல் மாவட்டம் மேன்மேலும் முதன்மையான மாவட்டமாக திகழ அனைத்து ஆசிரியர்களும் பாடுபட வேண்டும். இதனையடுத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டுமென பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.