Categories
அரசியல்

என்னது…! “காங்கிரஸ்க்கு ராஜ்யசபா சீட் வேண்டுமா”….? முதல்வரின் முடிவு என்ன….? குழப்பத்தில் கட்சி….!!!!

தமிழகத்தின் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் மாதம் டெல்லி செல்ல உள்ளார். இவர் அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க உள்ளார். ஆனால் அப்போது ஸ்டாலினுக்கு ஒரு பிரச்சினை காத்துள்ளது.  அது என்னவென்றால் தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுகவிற்கு 4 எம்பி பதவிகள் கிடைக்கும். இதில் ஒரு பதவியை தங்களுக்கு கொடுக்குமாறு சோனியா ஸ்டாலினை கேட்க உள்ளார். ஆனால் சோனியாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு சீட்டை ஸ்டாலின் தருவாரா? என்பது பெரும் குழப்பமாக உள்ளது.

ஏனென்றால் திமுக தலைவர்கள் சிலரும், கட்சிக்குள் பலரும் எம்பி பதவிக்காக காத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எப்படி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை சீட் கிடைத்தால் அது முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கா? அல்லது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கா அல்லது முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ்க்கா? என்று கட்சியில் ஒரு பட்டிமன்றமே நடைபெற்று வருகின்றது. இந்த எம்பி பதவியை இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர். எனவே அடுத்த மாதம் டெல்லி செல்லும் முதல்வருக்கு ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |