அமைச்சர் பெரியகருப்பன் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழைய அரண்மனை வளாகத்தில் வைத்து அரசின் அனைத்து துறைகளின் சார்பில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், துறைத்தலைவர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் பூபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கண்காட்சியை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கண்காட்சியில் தேசத்தலைவர்களின் புகைப்படங்கள், வேளாண்மை துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இதனையடுத்து ஒரு கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்து 57 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 302 பேருக்கு வழங்கி பாராட்டியுள்ளார்.