Categories
மாநில செய்திகள்

#FLASHNEWS: வேன் மோதி பலியான 2ஆம் வகுப்பு மாணவன்…. தனியார் பள்ளிக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை அளிக்கவும், தனியார் பள்ளி நிர்வாகம் இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் சம்பவம் நடந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |