Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

தமிழகத்தில் புதிய நியாயவிலை கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 5,000 நியாயவிலை கடைகள் அமைந்துள்ளது. இந்த நியாயவிலை கடைகளின் மூலமாக பல்வேறு ஏழை, எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பெற்று பயன் அடைகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி 11 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் புதிய நியாயவிலை கடைகளை அமைக்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நகை கடன் தள்ளுபடி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு மக்களுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். அதன்பிறகு அமைச்சர் சக்கரபாணி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 600 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ 20 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். நத்தம் பகுதியில் கல்லூரி மற்றும் குளிர்பதன கிட்டங்கி அமைத்து தரப்படும் என்றார். மேலும் தி.முக அரசு மக்களுக்கு இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை செய்யவுள்ளது என்றும் கூறினார்.

Categories

Tech |