திண்டிவனம் அருகில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 10 பேர் காயமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை காலனி அண்ணா தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான உதயன், 25 வயதான சிவகுமார், 27 வயதான ஹரிஹரன், 22 வயதான ரியாஸ், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் அங்கு இருக்கின்ற மைதானத்தில் நாய் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அதே காலனியில் உள்ள முனியன் தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான இமானுவேல், 19 வயதான கோபிநாத், 20 வயதான புகழேந்தி ஆகியோர் மோட்டார் வாகனத்தில் மைதானத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களைப் பார்த்து சிறுவனுக்கு சொந்தமான நாய் குறைத்தது. உடனே அந்த சிறுவன் அந்த நபர்களிடம் நாய் உங்களை கடித்து விடப்போகிறது என்று எச்சரித்து சொன்னான். அதற்கு அந்த மூன்று பேரும் நாய் எங்களை கடித்தால் சும்மா விடமாட்டோம் என்று மிரட்டினார்கள். இதனால் கோபமடைந்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின் வாக்குவாதம் மோதலாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கினார்கள். இந்த தாக்குத்தாலல் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த 10 பேரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அங்கு வைத்து அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரோஷனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.