தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலக்காவேரி தங்கம் பகுதியில் முகமது ரபிக்-பரக்கத் நிஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு டிப்ளமோ படித்து வரும் ஹாலிக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹாலிக் படிக்காமல் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்து கோவம் அடைந்த பரக்கத் நிஷா ஹாலிக்கை கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து ஹாலிக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹாலிக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.