Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

படிக்கட்டில் பயணிக்குறாங்க…. “கூடுதல் பஸ் இயக்க வேண்டும்”… எம்.எல்.ஏ அர்ஜுணன் கோரிக்கை…!!

பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மாலை கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அர்ஜுணன் எம்.எல்.ஏ கிளை மேலாளர் நாராயணமூர்த்தியிடம் கேட்டு கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி சிலை அருகில் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் சிலர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரிக்கு சென்றுள்ளனர். இதை பார்த்த அர்ஜுணன் எம்.எல்.ஏ அந்த மாணவர்களிடம் அறிவுரை வழங்கி படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அர்ஜுணன் எம்.எல்.ஏ திண்டிவனம் அரசு பணிமனையில் உள்ள கிளை மேலாளர் நாராயணமூர்த்தியை  நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பள்ளி,கல்லூரி நேரங்களில் காலை மாலை கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து கிளை மேலாளர் நாராயணமூர்த்தி, திண்டிவனம் பணிமனையில் இருக்கின்ற ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்த வேண்டும் என்றும், கழிப்பறை வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் அர்ஜுன் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்துள்ளார். அப்போது அதிமுக நிர்வாகிகள், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Categories

Tech |