Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1000 ஆண்டுகள் பழமையான கோவில்…. தேர் இழுக்க 2000 காளைகள்…. கோலாகலமாக நடந்த திருவிழா….!!

ஒஸ்கூர் கிராமத்தில்  1000ஆண்டுகள்  பழமையான மத்தூரம்மா கோவில் தேர்த்திருவிழா  தேரை 2 ஆயிரம் காளைகள் இழுத்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூரை அடுத்துள்ள ஒஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள மாரியம்மனை மக்கள் மத்தூரம்மா என்று சொல்லி வழிபடுகின்றனர்.

மத்தூரம்மா  ஒஸ்கூர் கிராமப்பகுதிற்கு  மட்டுமல்லாமல்  அந்த கிராமத்தை  சுற்றியுள்ள 48 கிராமங்களையும் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். வருடந்தோரும் இந்த கோவிலில் பங்குனி மாதம் தேர்த் திருவிழா  நடைபெறுவது வழக்கம்.அந்த  திருவிழாவில் ஒஸ்கூர்  மற்றும்  சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தேர்கள் அலங்கரிக்கப்பட்டு அந்தந்த கிராமத்தின்  தேவதைகளை அதில்  மத்தூரம்மாவின்  தரிசனத்துக்காக அவர்கள் எடுத்து வருவது வழக்கம்.

போட்டி  போட்டு  கொண்டாடப்படும் இந்த தேர்த்திருவிழா நேற்று  நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில்  12 கிராமங்களில் தேர்கள் செய்யப்பட்டு  ஒரு தேருக்கு  200 மாடுகள் என 12 தேர் ரதத்திற்கு 2000க்கும் அதிகமான காளை மாடுகள் சுமார் 10  கிலோமீட்டர் தூரம்  தேரை இழுத்து வந்துள்ளன.

 

Categories

Tech |