Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு இப்படி ஒரு செக்…. அரசின் கிடுக்கிப்பிடி….!!!!

நீட் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், குடியரசு தலைவரை சந்தித்து பேச உள்ளதால், நல்லதொரு முடிவு கிடைக்கும் என நம்புவதாக கல்வியமைச்சர்  தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியானது, நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள பில்லர் மையத்தில் வைத்து இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றுள்ளது.  இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையானது பணி நியமன ஆணையைப் பெற்று தந்துள்ளது. மேலும் நீட் விவகாரம் பற்றி தமிழக ஆளுநரை சந்தித்து பேசினோம் என்றும் அவர் இது குறித்து டெல்லிக்கு அனுப்புவதாக கூறியுள்ளார்.ஆகவே விரைவில் நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச உள்ளதால்,  நீட் தேர்வுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொடர்பாக குட் டச் மற்றும்  பேட் டச் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் பயணம் செய்வதை தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இவ்வாறு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |