நேற்று பீகாரில் உள்ள பக்தியார்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்றார். அப்போது பாதுகாவலர்களும் அவருடன் இருந்தனர். இதையடுத்து அவர் சுதந்திர போராட்ட வீரரான ஷீல்பத்ரா யாஜிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக மேடை ஏறியுள்ளார். பின்னர் அவர் மலரஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த வேளையில் உள்ளூர் இளைஞர் ஒருவர் விறுவிறுவென நடந்து வந்து பாதுகாப்பு வளையத்தில் சிக்காமல் மேடை ஏறியுள்ளார். அதன்பிறகு முதலமைச்சரின் தோளில் ஒரு குத்து விட்டுள்ளார். அதனை கண்ட பாதுகாவலர்கள் அந்த இளைஞரை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து தள்ளி சென்றனர். பின்னர் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Bihar | A youth tried to attack CM Nitish Kumar during a program in Bakhtiarpur. The accused was later detained by the Police.
(Viral video) pic.twitter.com/FoTMR3Xq8o
— ANI (@ANI) March 27, 2022
இதையடுத்து அந்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் நகைக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வரும் சங்கர் வர்மா என்பது அடையாளம் காணப்பட்டது. இதற்கிடையே பாட்னா காவல் உயரதிகாரி ஒருவர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் தன்னை தாக்கிய இளைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் அந்த நபர் கூறும் புகார்களை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.